tamil world

மட்டக்களப்புவந்தாறுமூலையில் கி.மு 2ம் நூற்றாண்டுக்குரிய நாகர் அரசர்களின் மூன்று இராசதானிகள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிப்பு


                  மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட வந்தாறுமூலை கிராம சேவகர் பிரிவில் கி.மு 2ம் நூற்றாண்டுக்குரிய நாகர் அரசர்களின் மூன்று இராசதானிகள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.வந்தாறுமூலை கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்லடிச்சேனை, வேரம், பாலாமடு, கிடாக்குழி பிள்ளையாரடி வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத் தோட்டம் ஆகிய இடங்களலில் கி.மு 2ம் நூற்றாண்டுக்குரிய நாகரசர்களின் மூன்று இராசதானிகள் ஆட்சி செய்தமைக்கான சான்றுகள் இனம் காணப்பட்டதையடுத்து குறித்த சான்றுகளை வரலாற்றுத்துறை துரைசார் பேராசிரியரும், யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்கள் 08.05.2015 அன்று நேரடியாக சென்று ஆய்வினை மேற்கொண்டு அதனை உறுதிப்படுத்தினார்.குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் கால சான்றுகள் பற்றி பேராசிரியர் குறிப்பிடுகையில்,                   கல்லடிச்சேனை வேரம் எனும் இடத்தில் வந்தாறுமூலை விஸ்ணு ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பத்துக்கு (10) மேற்ப்பட்ட கருங்கற்தூண்கள் மிக ஆழமான நிலையில் நிலைக்குத்தாக நடப்பட்டுள்ளது எனவும், அவற்றுள் நிலத்திற்கு மேலாகவுள்ள 7' 6' நீளமும் 1' அகலமும் உடைய தூணையும், 9' 10' நீளமும்1'அகமும் உடைய தூணையும் ஆய்வு செய்த போது அதில் தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்பட்டன.அதில் வேள் நாகன் மகன் வேள் நாகன்' என நாகர் அரசர்களின் பெயரும் 'வேள் நாகன் பள்ளி' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் கருத்து நாகர் அரசர்களின் அரண்மனையை குறிப்பதாகும். மற்றுமொரு தூணில் நாக பந்தத்தின் உருவமும் காணப்பட்டன.பாவுகை கல் ஒன்றில் மணி நாகன் பள்ளி என காணப்பட்டன. இதன் கருத்து நாகர் அரசர்களின் வழிபாட்டுத் தலம் ஆகும். இங்கு 'வேள்' எனக் குறிப்பிடப்படுவது அரசர்களுக்கு வழங்கப்படும் உயரிய சிறப்புப் பட்டம் ஆகும். இங்கு கண்டு பிடிக்கப்பட்ட அனைத்து சான்றுகளிலும் வேள்நாகன், வேள் கண்ணன், வேள் நாகன் பள்ளி, மணி நாகன் பள்ளி என குறிப்பிடப்பட்டுள்ளன.                    பாலாமடு வயற்காணியில் ஆய்வினை மேற்கொண்டபோது ஐம்பதிற்கும் (50) மேற்ப்பட்ட கருங்கற் தூண்களும், அதிகளவான செங்கல்கற் இடிபாடுகளும், செங்கல் ஓடுகளும், செங்கபில கல் ஓடுகளும், சுடுமண்ணினால் செய்யப்பட்ட நாகத்தின் உருவம், சுடப்பட்ட நீரேந்தும் தாழி, மட்குடம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டு கண்டு பிடிப்பு,





இவை அனைத்து சான்றுகளிலும் வேள் நாகன் வேள் கண்ணன், வேள் நாகன் மகன் வேள் கண்ணன், வேள் கண்ணன் மகன் வேள் நாகன் என நாகரசர்களின் பெயர்களும் வேள் நாகன் பள்ளி எனவும் தமிழ் பிராமி வரிவடிவில் எழுதப்பட்டிருந்தன. அத்தோடு 5'6' விட்டம் உடையை அரைவட்டக் கல்லிலும் 2'5' விட்டமுடைய கருங்கல்லிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தது.                     வந்தாறுமூலை பலாச்சோலை வில்லுத்தோட்டம் எனும் இடத்தில் பரந்த நிலப்பரப்பில் 30ற்கு மேற்பட்ட கருங்கற் தூண்களும் செங்கல் இடிபாடுகளும் ஈமைத்தாழித்துண்டம் செங்கல் ஓடுகளும், செங்கபில ஓடுகளும், வட்டமூடிக் கற்களும் கண்டுபிடிக்கப்பட்டன.                     இவற்றிலும் கருங்கற் தூண்களில் வேள் நாகன் வேள் கண்ணன், வேள் கண்ணன் மகன் வேள் நாகன், வேள் நாகன் மகன் வேள் கண்ணன் என நாக அரசர்களின் பெயரும், மணி நாகன் பள்ளி எனவும் எழுதப்பட்டிருந்தன. செங்கற்களிலும் மணி நாகன் பள்ளி என எழுதப்பட்டிருந்தன. 1'10' விட்டமுடைய ஓரே அளவான ஏழு வட்டம் முடிக்கல் காணப்பட்டன. இதில் வேள் நாகன் என எழுதப்பட்டிருந்தது.இலங்கையில் கி.மு 2ம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ் அரசுகளும் குடியிருப்புக்களும் உருவாகியுள்ளன. இதில் நாகர்கள் தமிழர்கள் ஆவர். இவர்கள் நாகரிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும் நகரங்களை நிர்மானித்து அரச ஆட்சிகளையும் நிறுவினர்.                       கட்டடக்கலையில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும், விவசாயத்தை அறிமுகம் செய்தவர்களாகவும் விளங்கினர். நாகர்கள் அரண்மனையினை அமைக்கும்போது அதனுடன் வழிபாட்டுத்தலங்களையும் குடியிருப்புக்களையும் உருவாக்கினர்.மட்டக்களப்பில் நாகரைப் பற்றி இதுவரையான ஆய்வுகளில் எட்டு நாகராச்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாக காணப்படுவது நான்கு ஆகும். அவற்றுள் மூன்று வந்தாறுமூலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை பெருங்கற் பண்பாட்டுடன் தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றது என வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்தார்.மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட வந்தாறுமூலை வி;ஸ்ணு ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகர் கல்வெட்டு சாசனங்கள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.                        வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன் அவர்களினால் ஆலய முன்றலில் இருந்த இரு கருங்கற் தூண்கள் அரைவட்ட வடிவ கருங்கல்லிலும் எழுத்துக்கள் இருப்பதை அவதானிக்கப்படதையடுத்து அவற்றை வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் தெரியப்படுத்தியதை அடுத்து பேராசிரியர் கல்வெட்டினை ஆய்வு செய்து பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்தினார்.ஆலய முன்றலில் காணப்பட்ட 5அடி 8அங்குலம் உடைய அரை வட்டக் கருங்கல்லை ஆய்வு செய்தபோது அதில் கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ் பிராமிக் வரிவடிவம் காணப்hட்டது. குறித்த கல்லில் குறிப்பிடப்படும் விடயமானது மணி நாகன் பள்ளி வேள் கண்ணன் என எழுதப்பட்டுள்ளது.                         மணிநாகன் என்பது நாகர்களது வழிபாட்டு தெய்வமாகிய நாகதேவனை குறிப்பதாகும், மணிநாகன் பள்ளி என்பது நாகர்களது வழிபாட்டு தலம் என்பதாகும்;. மணிநாகன் பள்ளி வேள் கண்ணன் என்பது வேள் கண்ணன் எனும் நாகமன்னனால் அமைக்கப்பட்ட ஆலயம் என்பதாகும். வேள் கண்ணன் என்பது நாகரசனின் நாமம் ஆகும். வேள் என்பது அரசர்களுககு வழங்கும் சிறப்பு பட்டமாகும்.கல்வெட்டு கண்டு பிடிப்பு,                         இங்கு காணப்படும் அரைவட்ட கருங்கல்லானது நாகர்களது வழிபாட்டு தலத்திற்கு முன்பாக வைக்கப்படுவதாகும். இதில் அதிகளவில் நாக பந்தங்களின் உருவம் காணப்படுகின்றது                         இலங்கையில் கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ் அரசுகளும் குடியிருப்புக்களும் உருவாகியுள்ளன. இதில் நாகர்கள் தமிழர்கள் ஆவர். இவர்கள் நாகரிகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும் நகரங்களை நிர்மாணித்து அரச ஆட்சிகளையும் நிறுவினர். கட்டடக்கலையில் வளர்ச்சி அடைந்தவர்களாகவும், விவசாயத்தை அறிமுகம் செய்தவர்களாகவும் விளங்கினர். நாகர்கள் அரண்மனையினை அமைக்கும்போது அதனுடன் வழிபாட்டுத்தலங்களையும் குடியிருப்புக்களையும் உருவாக்கினர். மட்டக்களப்பில் நாகரைப் பற்றி இதுவரையான ஆய்வுகளில் எட்டு நாகராச்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமானதாக காணப்படுவது நான்கு ஆகும். அவற்றுள் மூன்று வந்தாறுமூலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை பெருங்கற் பண்பாட்டுடன் தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. - என வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதன் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நாகர் காலத்துக்குரிய கல்வெட்டு சான்றுகளை வரலாற்றுதுறை துரைசார் பேராசிரியரும், யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர்.
கல்வெட்டு கண்டு பிடிப்பு,

2200 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு!

மூலம்---http://www.vikatan.com/news/article.php?aid=49553

மதுரை: மதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டதாகும்.
இது குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறுகையில், “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே பாய்கிறது. தொல்லியல் வளமிக்க பகுதியாக விளங்கினாலும் கூட இதுகாறும் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அகழாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

2013-14ல் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சுமார் 293 பல்வகை தொல்லியல் எச்சங்கள் கொண்ட ஊர்கள், வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில்  அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடி தொல்லியல் அகழாய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த ஊர் மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில், தென்கிழக்கு திசையில் ராமேஸ்வரம் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், வைகை நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

தற்போதைய கீழடி ஊரிலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் பள்ளிசந்தை திடல் என்றழைக்கப்படும் தொல்லியல் மேடொன்று உள்ளது. தரையிலிருந்து சுமார் இரண்டரை மீட்டர் உயர்ந்து காணப்படும் இம்மேடு,  தற்பொழுது தென்னந்தோப்பாக பயன்பாட்டில் உள்ளது. முன்பு நிலத்தினை உழும்பொழுது பலவகையான மட்கலன்கள், தொல்பொருட்கள், பெரிய அளவிலான சுட்ட செங்கற்கள் மற்றும் கூரை ஓடுகள் இங்கு கிடைக்க பெற்றுள்ளன. இம்மேட்டின் கிழக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கொந்தகை என்ற ஊருக்கு செல்லும் பாதையில், இதனோடு தொடர்புடைய ஈமக்காடும் அமைந்துள்ளது. இங்கு பல ஈமத்தாழிகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

கீழடி மற்றும் கொந்தகை உள்ளடக்கிய பகுதிகள் பிற்காலப் பாண்டியர் காலத்தில் ‘குந்திதேவி சதுர்வேதிமங்கலம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. கீழடியுள்ள அர்ஜுனேஸ்வரர் கோயிலில் காணப்படும் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில்,  ‘வேலூர் குளக்கீழ்’ என்ற நாட்டு பிரிவின் கீழ் அமைந்திருந்ததாக குறிக்கப்படுகிறது. இதேபோன்று பல்வகை தொல்லியல் ஆதாரங்கள் இருந்தும்கூட வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் விரிவான தொல்லியல் அகழாய்வு ஏதும் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. அனுப்பானடி, பரவை, கோவலன் பொட்டல், தி.கல்லுபட்டி, சங்க கால பாண்டியர்களின் துறைமுகமாக இருந்த அழகன்குளம் போன்ற இடங்களில் சிறிய அளவில் மாத்திரமே அகழாய்வு நடைபெற்றுள்ளது.

இவற்றினை அடிப்படையாக வைத்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில், இரும்புக் காலம் முதல் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சி மற்றும் உருமாற்றத்தினை அறிந்து கொள்ளும் வகையில், சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் நடப்பாண்டில் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் அகழாய்வில், கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3ஆம் நூற்றாண்டை சார்ந்த தொல்லியல் எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றுள் பெரிய அளவிலான சுட்ட செங்கற்களை கொண்டு கட்டபட்ட கட்டட பகுதிகள், பெரிய கூரை ஓடுகள், முத்து மணிகள், கண்ணாடி மற்றும் பல்வகையான கல்மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், அம்மி, குழவி, இரும்பு, செப்பு பொருட்கள் போன்றவை அடங்கும்.

ரோமானிய நாட்டுடன் இவ்விடம் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததற்கு சான்றளிக்கும் வகையில்,  வணிகர்களால் கொண்டு வரப்பட்ட ரூலட் மற்றும் அரிட்டைன் வகை மண்பாண்ட துண்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் வரலாற்று தொடக்க காலத்தை சேர்ந்த கருப்பு சிவப்பு மண்பாண்ட வகை, வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு சிவப்பு மண்பாண்ட வகை மற்றும் ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்ட வகையும் அகழாய்வில் கிடைத்துள்ளன.
இது தவிர்த்து தனி நபர்களின் பெயருடன் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பு கொண்ட மண்பாண்ட ஓடுகள் இங்கு கிடைத்திருப்பது குறிப்பிடதக்கதாகும். மேலும் விரிவான அகழாய்வுக்கு கால அவகாசத்தை மேலும் ஒரு வருடம் நீட்டித்து தரக்கோரி இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் கேட்டிருக்கிறோம். முதன்மை அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 4 அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் அக்ழாய்வு துறை மாணவர்கள் சிலரும் ஆய்வு செய்து வருகிறோம். மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அதே சமயம் எங்களின் ஆய்விற்கும் இடையூறு ஏற்படாமல் ஆய்வு செய்து வருவதால் ஊர்மக்களும், நில உரிமையாளர்களும் சிறந்த ஒத்துழைப்பு தருகிறார்கள்"  என்று கூறினார்.

-ப.சூரியராஜ்
படங்கள்: ந.ராஜமுருகன்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)
from:--<http://www.vikatan.com/news/article.php?aid=49553>

தமிழ் இலக்கியவரலாறு

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

  • சங்க இலக்கிய நூல்கள்
  • பதினெண்மேற்கணக்கு
  • எட்டுத்தொகை
  1. நற்றிணை
  2. ஐங்குறுநூறு
  3. பரிபாடல்
  4. குறுந்தொகை
  5. பதிற்றுப்பத்து
  6. கலித்தொகை
  7. அகநானூறு
  8. புறநானூறு
  • பத்துப்பாட்டு
  1. திருமுருகாற்றுப்படை
  2. சிறுபாணாற்றுப்படை
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. பொருநராற்றுப்படை
  5. முல்லைப்பாட்டு
  6. மதுரைக்காஞ்சி
  7. நெடுநல்வாடை
  8. குறிஞ்சிப்பாட்டு
  9. பட்டினப்பாலை
  10. மலைபடுகடாம்
  • சங்கம் மருவிய கால இலக்கிய நூல்கள்
  • பதினெண்கீழ்க்கணக்கு
  1. நாலடியார்
  2. நான்மணிக்கடிகை
  3. இன்னா நாற்பது
  4. இனியவை நாற்பது
  5. களவழி நாற்பது
  6. கார் நாற்பது
  7. ஐந்திணை ஐம்பது
  8. திணைமொழி ஐம்பது
  9. ஐந்திணை எழுபது
  10. திணைமாலை நூற்றைம்பது
  11. திருக்குறள்
  12. திரிகடுகம்
  13. ஆசாரக்கோவை
  14. பழமொழி நானூறு
  15. சிறுபஞ்சமூலம்
  16. முதுமொழிக்காஞ்சி
  17. ஏலாதி
  18. கைந்நிலை

நமது வழிபாட்டு முறைகளின் அறிவியல்

பல்லாயிரம் ஆண்டுகளாக, பலவாறு வரையப்பட்ட செம்பு தகடுகளை நாம் வழக்கத்தில் காண்கிறோம். கோவில் சிலை பிரதிஷ்ட்டை செய்யும்போது, அதனடியில் மந்திரங்கள் ஒலித்து பூஜிக்கப்பட்ட செப்பு எந்திர தகடு வைக்கப்படும்இங்கே தகடுகளின் மீது வரையப்பட்ட படத்தில் என்ன ஆச்சர்யம்? ஹான்ஸ் ஜென்னி என்ற அறிவியல் மேதை தான் கண்டுபிடித்த கருவியன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஒலியின் அதிர்வுகளைக்கொண்டு அதை ஒரு இரு பரிமாண வடிவமாக மாற்றினார். அப்போது நமது ஓம் மந்திரத்தை ஒலித்து சோதித்தபோது அது செப்பு தகடுகளில் வரையப்பட்டுள வடிவத்தை ஒத்து வந்தது.
                          அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட மந்திரத்திற்கும் தனித்தனியாக வரையப்படும் எந்திரங்களின் வடிவமும் அதன் ஒரு பரிமாண வடிவமே. TONOSCOPE என்ற கருவி இல்லாமலே மந்திர ஒலிகளின் வடிவத்தை நம் முனோர்கள் கண்டது எப்படி !!!


maps


தஞ்சை பெரிய கோவில்



சனீஸ்வரன் திருநள்ளாறு



சிதம்பரம்

பண்டைய தமிழ் எண் வடிவங்கள்


* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156

மேலும் தொடர‌
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)